search icon
என் மலர்tooltip icon
    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா.
    • ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.

    தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் பணியை பல வருடங்களாக சிறப்பாக செய்துக் கொண்டு வருகிறது விகடன் சினிமா விருதுகள். இந்தாண்டுக்கான விருது விழா மே 31 ஆம் தேதி சென்னையில் நடைப்பெற்றது.

    தமிழ் சினிமாவின் பல திரைப்பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.

    இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இப்படம் விகடன் சினிமா விருது விழாவில் பல பிரிவுகளில் நாமினேட் ஆகிருந்தது. அதில் இப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.

    சிறந்த இயக்குனர் - கார்த்திக் சுப்பராஜ், சிறந்த நடிகை - நிமிஷா சஜயன், சிறந்த எண்டர்டெயினர் - எஸ்.ஜே சூர்யா, சிறந்த பின்னணி இசை - சந்தோஷ் நாராயணன், சிறந்த ஒப்பனை - வினோத், சிறந்த ஆடை வடிவமைப்பு - ப்ரவின் ராஜா, சிறந்த கலை இயக்குனர் - சந்தானம்

    ஆகிய 7 விருதுகளையும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வென்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கருடன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
    • கோட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக நரிக்குறவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் நடிகர் சூரி, சசிக்குமார் இணைந்து நடித்துள்ள `கருடன்' திரைப்படம் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்தநிலையில் கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் பார்க்க வந்த 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தட மறுத்ததாகவும், திரையரங்கத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

    திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தர மறுத்ததால் இதுகுறித்து காவலர்களின் அறிவுறுத்தலின் பேரில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக நரிக்குறவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அந்த பகுதியில் 20-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கர்நாடகா அரசு, முதல்வர் சித்தராமையா மற்றும் தனக்கு எதிராக மிருக பலி கொடுத்து யாகம் என சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
    • தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவிலிலும் மிருக பலி சம்பந்தப்பட்ட வழிபாடுகள் கிடையாது என கேரள அரசு விளக்கம்.

    கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் அருகே தனக்கும், முதல்-மந்தரி சித்தராமையா மற்றும் எங்கள் அரசுக்கு எதிராக சத்ரு பைரவி யாகம், மிருகபலி நடைபெறுவதாகவும், யாகத்தில் 21 ஆடுகள், 5 பன்றிகள், 21 செம்மறி ஆடுகள் பலியிடப்பட்டுள்ளதாகவும் வேண்டுமானால் கேரளாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி கோவிலை பாருங்கள் தெரியும் என கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் பகீர் தகவல் கூறினார்.

    இதுகுறித்து கேரள அரசு விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும் கண்ணூர் கண்டிபரம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உளவுத்துறை மற்றும் போலீசார் மூலம் கேரள அரசு சிறப்பு விசாரணை நடத்தியது.

    விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி கேரள டி.ஜி.பி.க்கு அறிக்கை அளித்தனர். அதில் சத்ருபைரவி யாகமோ, மிருக பலியோ நடைபெறவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

    மேலும் கேரளாவில் உள்ள கண்ணூர் ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் நிர்வாக வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவிலிலும் மிருக பலி சம்பந்தப்பட்ட வழிபாடுகள் கிடையாது. அதுபோல் கேரளாவில் உள்ள மலபார் தேவசம் போர்டின் கீழ் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் பெயர் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

    ஸ்ரீ ராஜராஜேஷ்வரி கோவில் கேரளாவில் உள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். மலபார் தேவசாம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவில்களிலும் மிருக பலியுடன் கூடிய வழிபாடுகள் அல்லது பிரசாதம் கிடையாது என்று மலபார் என தெரிவித்துள்ளது.

    • மீதி பணத்தை 18 சதவீத ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து அனுப்ப வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
    • பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    டேட்டிங் கலாச்சாரம் பரவி வரும் நிலையில், பிரிந்து சென்ற காதலியிடம் காதல் செலவை பட்டியல் போட்டு அனுப்பி வைரலாக்கிய வாலிபரின் செயல் வைரலாகி வருகிறது.

    பட்டய கணக்காளரான அந்த வாலிபரும், இளம்பெண்ணும் காதலித்து வந்த போது ஒன்றாக பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். 7 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென காதலர்கள் பிரிந்துள்ளனர். இந்நிலையில் காதலிக்கு தான் செலவு செய்த பட்டியலை அனுப்பி பணத்தை திருப்பி தருமாறு அவர் கூறி உள்ளார்.


    அதில், காதலியை வெளியே அழைத்து சென்ற போது வாகன செலவு ரூ.450, திரைப்படங்களுக்கு சென்றது, காபி குடித்தது, ஆட்டோவில் சென்றது, பூக்கள் வாங்கி கொடுத்தது, உணவுக்கு செலவு செய்தது என அனைத்தையும் தனித்தனியாக பட்டியல் போட்ட அவர் மொத்தமாக 7 மாதங்களில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் வரை செலவு செய்ததாக கூறி உள்ளார். மேலும் இந்த தொகையில் ரூ.51 ஆயிரத்தை தனது காதலி பகிர்ந்து கொண்ட நிலையில், மீதி பணத்தை 18 சதவீத ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து அனுப்ப வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    • 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
    • இந்த விதிமுறை ஜூன் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. அதனால் 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விதிமுறை ஜூன் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், தமிழகத்தில் அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    போக்குவரத்து துறை சார்பில் முறையாக அரசாணை வெளியிடாததால் சட்டத்தை அமல்படுத்துவதில் காலதாமதமாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜூன் 4க்கு பிறகு இந்த நடைமுறைக்கு அமலுக்கு வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • ஐபிஎல் 2023 தொடரில் கேகேஆர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் விளங்கியதால் அவருக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
    • இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் பதவியேற்கும் பட்சத்தில் கே.கே.ஆர் அணியின் பயிற்சியாளர் பணியிலிருந்து அவர் விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சயாளர் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் ஐசிசி 2024 உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த பதிவிக்கான விண்ணப்பம் கடந்த மே 27 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் 3000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    வி.வி.எஸ் லக்ஷ்மண், கௌதம் கம்பீர், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் முதலில் அடிபடத் தொடங்கின. இவர்களுள் கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ தொடக்கத்திலிருந்தே மிகுந்த ஆர்வம் காட்டி வந்தது.

    ஐபிஎல் தொடரில் கேகேஆர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் விளங்கியதால் அவருக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

     

    ஆனால் கே.கே.ஆர் இணை உரிமையாளர் ஷாருக் கான், காம்பீரை தங்கள் அணியிலேயே தக்கவைத்துக்கொள்ள விரும்புவதால் காம்பீர், இந்தியஅணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பாரா? அல்லது நிராகரிப்பாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் விரைவில் பதவி ஏற்க உள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

     

    இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் பதவியேற்கும் பட்சத்தில் கே.கே.ஆர் அணியின் பயிற்சியாளர் பணியிலிருந்து அவர் விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • அரசியலில் எதிர்க்கட்சி ஜெயிக்காது. ஆளுங்கட்சி தோற்று போகும்.
    • தமிழ்நாட்டில் தான் அனுப்பியாச்சே. வாலும் ஆடாது. மேலேயும் மக்கள் அனுப்பியாச்சு.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உரிமை போராளியின் பெருமைமிகு கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டு கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    * நிறைய ஷூட்டிங் பார்த்திருப்பீர்கள். கன்னியாகுமரி ஷூட்டிங் பற்றி?

    நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். மக்கள் வருவார்கள். இவரே ஆடியன்ஸை கூட்டி போகிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஆடியன்ஸ்.

    * ஜூன் 4-ந்தேதி பிரகாஷ் ராஜ், நாட்டு மக்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?

    தமிழ்நாட்டில் தான் அனுப்பியாச்சே. வாலும் ஆடாது. மேலேயும் மக்கள் அனுப்பியாச்சு. அனுப்புன மாதிரி தான் தெரிகிறது.

    அரசியலில் எதிர்க்கட்சி ஜெயிக்காது. ஆளுங்கட்சி தோற்று போகும். தோற்றுப்போவதற்கான அனைத்து வேலைகளையும் அவர் செய்து விட்டார்.

    * காந்தி திரைப்படம் வந்த பிறகு தான் காந்தியை பற்றி உலகத்திற்கு தெரியும் என்று சொல்லியிருப்பது?

    ஆமாம். அவர் வந்த பிறகு தானே கன்னியாகுமரி இருப்பது எங்களுக்கு தெரியும். விவேகானந்தரை இப்போ தான் தெரியும் என்று கூறினார்.

    • தமிழ் சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின்.
    • நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

    தமிழ் சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். கவின் விஜய் டி.வியில் புகழ் பெற்ற கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். பின் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.

    பின்னர், கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடி யில் மட்டும் வெளியான லிஃப்ட் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    சமீபத்தில் இளன் இயக்கத்தில் கவின் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பல சுவாரசியமான திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் கவின். அடுத்து நடன இயக்குனரான சதீஷ் இயக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட்டான விஷ்னு எடவன் இயக்கும் முதல் படத்தில் கவின்  நடிக்கவுள்ளார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கவுள்ளது.

    வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட வைகோ ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ந்தேதி நெல்லையில் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட வைகோ ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அவர் குணமடைந்து வருகிறது.

    இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோவை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் வைகோவின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    • கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல்.
    • இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தை ஒபேலி N கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படம் இன்று வரையிலும் பலரின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது. நடிகர் சூர்யா இந்த படத்தில் சாக்லேட் பாய் கணவராகவும் ரக்கெட் பாய் லவ்வராகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். படத்தின் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப் பெரிய ஹிட் ஆனது.

    அதைத்தொடர்ந்து ஒபேலி N கிருஷ்ணா, சிம்பு நடிப்பில் 10 தல திரைப்படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். அடுத்ததாக ஒபேலி N கிருஷ்ணா, புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

    இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அவர் இயக்கவிருக்கும் திரைப்படத்தின் கதைக்களம் என்ன? என்னென்ன நடிகர்கள் நடிக்கபோகிறார்கள் குறித்த தகவல் எதையும் வெளியிடவில்லை.

    ஆனால் இப்படம் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து இதில் நடிகர் கவினை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×